Thursday 26 April 2012

கல்வெட்டு:- 13 (சிலாஸாசனம்:13)

சோட்டாணிக்கரை திருக்கோவிலிருந்து பிற ஸ்தலங்களின் அமைவிடங்கள்.

காலடி:- 39கி.மீ.

கொடுங்கல்லூர் பகவதி ஆலயம்:- 68கி.மீ.

வைக்கம்:- 23கி.மீ.

கொல்லம்:- 162கி.மீ.

கோழிக்கோடு:- 236கி.மீ.

திருவனந்தபுரம்:- 205கி.மீ.

திருச்சூர்:- 92கி.மீ.

தேக்கடி:- 172கி.மீ.

ஆலுவா:- 28கி.மீ.

ஆலப்புழா:- 79கி.மீ.

வைட்டில்லா:- 12கி.மீ.

பாலக்காடு:- 157கி.மீ.

பம்பை:- 173கி.மீ.


குருவாயூர் கோவில்:- 122கி.மீ.


கோட்டயம்:- 57கி.மீ.

எர்ணாகுளம்:- 18கி.மீ.

திருப்புனித்துரா:- 8கி.மீ.

இடுக்கி:- 110கி.மீ.

கொச்சி விமான நிலையம்:- 38கி.மீ.

எர்ணாகுளம் தெற்கு ரயில்வே:- 18கி.மீ.

எர்ணாகுளம் பேரூந்து நிலையம்:- 20கி.மீ.


பாண்டிச்சேரி:- 628கி.மீ.

தஞ்சாவூர்:- 459கி.மீ.

வேளாங்கண்ணி:- 562கி.மீ.

சென்னை:- 712கி.மீ.

திருப்பதி:- 749கி.மீ.

மைசூர்:- 436கி.மீ.

ராமேஸ்வரம்:- 509கி.மீ.


பெங்களூரு:- 528கி.மீ.

பொள்ளாச்சி:- 187கி.மீ.

கோயம்புத்தூர்:- 205கி.மீ.

கன்னியாகுமரி:- 298கி.மீ.

மதுரை:- 326கி.மீ.

பழனி:- 253கி.மீ.

கொடைக்கானல்:- 327கி.மீ.


Wednesday 4 April 2012

கல்வெட்டு:12. (சிலாசாஸனம்:-12)

கல்வெட்டு;-12

சோட்டாணிக்கரை பகவதிஅம்மன் கோவில் பூஜை முறைகள்;-



சோட்டாணிக்கரைக் கோவிலில் சாதாரண காலங்களில் காலை 4மணிக்கும்,
வெள்ளிக்கிழமை மற்றும் மற்ற விசேஷக்காலங்களில் காலை 3.30மணியளவிலும் நடைத்திறப்படுகிறது.
நடைத்திறக்கப்பட்டு நிர்மாலயம் அகற்றப்பட்டு,திருவிளக்கு ஏற்றப்பட்டு சூரிய உதயத்திற்க்குள் அபிஷேகமும் .நைவேத்யமும் செய்விக்கப்படுகிறது.
யக்‌ஷிவதத்தை குறிப்பிடும் விதமாக தேவிக்கு காலை இருமுறை அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒருமுறை யக்‌ஷி என்ற துற்தேவதையை தேவி வதம் செய்தாள்.அதையே யக்‌ஷிவதம் எகின்றனர்.


அழகியப்பட்டாடையும்,அலங்கார நகைகளும் அணிவித்தவுடன் மூகாம்பிகை சரஸ்வதிதேவி முழுப்பரிணாமத்துடன் எழுந்தருளி பக்தர்களை ஆசிர்வதிக்கும் எதிர்த்தபூஜா,துவாதஷக்சரி மந்திர பூர்வ மலர் அர்ச்சனையுடன்
பூஜைகள் இனிதே நடைப்பெறுகின்றன.


காலை ஷீவேலி முடிந்தவுடன் தேவிசரஸ்வதி மூகாம்பிகைக்கு சென்றுவிடுவதாகவும்,
காலை 7மணிக்கு சோட்டாணிக்கரையில் ஷீவேலி நடந்து முடிந்தப்பின்னரே .கொல்லூர் மூகாம்பிகைதேவிக்கு பூஜை வழிபாடுகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

பந்தீரடி பூஜைக்கு முன்பாக துவாஷாக்சரி அர்ச்சனை நடந்து முடிந்துவிடும்.



கண்களைகூசச் செய்யும் அளவிற்கு,தங்ககவசத்தில் ஒளிரும்தேவி அலங்காரம் பந்தீரடி பூஜையின்போது சிறப்பாக செய்யப்படுகிறது.
பின்னர் பஜனம் இருப்பவர்களுக்கு பூஜிக்கும் குருமார்களால் புனிதத்தீர்த்தமும் ,பஞ்சக்கவ்ய கிருதமும் வழங்கப்படுகிறது.
இஒதன்பின்னர் சுமார் 11மணியளவில் சிவபெருமானுக்கு அபிஷேகமும்,
அலங்காரமும் ஆரம்பம் ஆகிறது.
ருத்ரதாண்ட மூர்த்தியிடம் பூத,பிரேத பிசாசுகள் அல்லல்பட்டு அபயம் கேட்டு நிற்கும்வன்னம் சிறப்பாக நடைப்பெறும்.   




சுமார் 11.45நிமிடங்களுக்கு உச்சி பூஜையும்,அதைத்தொடர்ந்து ஷீவேலியும் நடத்டப்ப பெற்று நடை அடைக்கப்படுகிறது.
மீண்டும் மாலை 4.00மணியளவில் ,நடைதிறப்படுகிறது.


மாலை 7.00மணிக்கு முன்னராகவே தீபஆராதனை முடிவடைகிறது.
சுமார் 8.00மணியளவில் அத்தாழபூஜையினைத் தொடர்ந்து ஷீவேலியுடன் மேலக்காவு கோவில்
அடைக்கப்படுகிறது.
காலையும் மாலையும் யானைமீது ஏறி உற்சவ அம்பாள் மும்முறை பிரதட்சணமாக வந்து
அருளாசி வழங்குகிறாள்.


அதன் பின்னர் மேல்சாந்தி கிளித்து "குருதிபூஜை",
செய்வதற்காக ,கீழக்காவு பத்ரகாளியம்மன் கோவிலுக்கு'
செல்கிறார்.
குருதிபூஜையானது,பூத பிரேத ,பிசாசுகளின் கொட்டம் அடங்குவன்னம் மிகவும் கம்பீரமாக
மேல்சாந்தி அவர்களால் செய்விக்கப்படுகிறது.
மேல்காவு கோவிலில் நடைஅடைக்கப்பட்டப் பின்னர் கோவிலின் தெற்குவாசல்வழியாக 
பக்தர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிகிடையாது. 

Thursday 29 March 2012

மனதின் ஆற்றல்.......... (பாகம்:1)


நடக்கப்போகும்ஒருசில விஷயங்களை,சிலர் தெய்வத்தின்முன்னிலையில் அருள்வாக்காகவும்,ப்ரஸன்னம் என்னும் மலையாளதேசத்துக் கலை வழியாகவும் கூறுகின்றனர்,.
ஒன்றுமே தெரியாதவன்,திடீரென நடக்கப்போகும் நிகழ்வுகளை கூறுகிறான்.
அப்போது அவனை சிலர்
"அவன் ஏதோ மாயவேலை செய்கிறான்...",
என்கின்றனர்.
"அவனுக்கு தெய்வத்தின் அருள் கிடைத்துவிட்டது",
என்கிறனர் ஆன்மீகவாதிகள்.

"அதெல்லாம் ஏதும்மில்லை.அவன் மூளைக்கு ,ஈ.எஸ்.பி E.S.P.,எனும்(அறிவியல் விளக்கப்படி, அதி விசேஷமான இந்திரிய ஞான உணர்வு" extra sensory perception),ஆற்றல் வந்துள்ளது",

என ஆராய்ச்சியாளர்கள் கூறுவார்கள்.
இதில் எதுதான் உண்மை?
என்னதான் நடக்கிறது இந்த உலகத்தில்?


நம்நாட்டில் யோகிகள்,ஞானிகள்,மஹான்கள்,
ரிஷிகள்,அவதாரப்புருஷர்கள்,ஆகியோர் தங்களுடைய யோக ஆற்றல்களால் தங்களுக்குள்ளாக இருக்கும் இந்த ஞான சக்தியை தெரிந்துக்கொண்டும்,அதைப் பயன்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.
இந்த அதிசய ஞானசக்தியால் நடக்கூடியதை முன்கூட்டியே உணர்ந்துக்கொள்ள முடியும்.வரக்கூடிய ஒருசில ஆபத்துக்களை ஞானிகள் தெரிந்துக்கொண்டு,எச்சரித்தும் இருக்கிறார்கள்.
இத்தைகய சக்தியைத்தான் மேலைநாட்டினரும்,நம்நாட்டு விஞ்ஞானிகளும் ஈ.எஸ்.பி எக்ஸ்ட்ரா சென்ஸரி பெர்ஷப்ஷன் என்கிறார்கள்.



சொல்லப்போனால் இயற்கையாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் உள்ளுணர்வு இருக்கிறது.

"நான் அப்பவே நெனச்சேன்...இப்படி நடக்கும்னு",
"இப்பத்தான் உன்னையப் பற்றி நெனச்சேன் ...ஆனால் நீயே இங்க வந்துட்டே...",
"எனக்கென்னமோ இது சரின்னுப்படவில்லை...",
"அவனைப்பார்த்தால் நல்லவன் போல தோணவில்லை...அவனிடம் ஏதோ தப்பு இருக்கு..",
"நான் அப்பவே சொன்னேன்ல இப்படி நடக்கும்னு..",
இப்படி சராசரியாக அனைவரும் கூறுவதுண்டு.
இப்படிக்க்கூறக் காராணம் ,அவர்களுக்குள் இருக்கும் உள்ளுணர்வின் அதீதசக்தியேக் காரணம்.

அதை அவர்கள் சரிவரப் பராமரிப்பதில்லை,அதை வளர்த்துக்கொள்வதும் இல்லை,..அதனாலேயே சிறுசிறுவிஷயங்களைப் பற்றிக் கூறுவதோடு அது நின்றுப் போய்விடுகிறது.


இந்த ஆற்றலானது ஒருசிலருக்குப் பிறப்பில் இருந்தே இருக்கக்கூடும்.
ஒருசிலருக்கு இந்த ஆற்றல் திடீரென வேலைசெய்யத் தொடங்கிவிடும்.
சிலருக்கு இது போதுமான வளர்ச்சி இல்லாமலே இருக்கக்கூடும்.


நம் உள்மனமானது உள்ளுணர்வுகள் மூலமாகத்தான் செய்திகளை சொல்லும் (intuition).
விடியல்காலையில் எழுந்ததும் முகம்,கை,கால்களை ஜில்லென்ற தண்ணீரில் கழுவிவிட்டு ,தரையில் ஓர் துணியினை விரித்து அதன் மேல்,5நிமிடம் அமைதியாக உட்கார்ந்துப்பாருங்கள்.

முதல்15நாட்களுக்கு உங்கள் மனம் அலைபாயும் கண்டதையும் சொல்லும்,கண்டதையும் எண்ணும்.
ஆனால் இதேப் பயிற்சி தினமும் கொடுக்கப்பட்டால்,ஒரே மாதத்தில் உங்களது உள்ளுணர்வு மெல்ல எழத்தொடங்கும்.
இதை தியானம் என்பர்.
உங்கள் மனம் மெல்லப் பேசத்தொடங்கும்...
உங்கள் மனம் என்ன என்ன சொல்கிறது என தெளிவாக கேளுங்கள்.
அது முதலில் என்ன சொல்கிறது என்றுப் பாருங்கள்.

அது முதலில் கூறும் வாக்கே, அறிவியலின்படி உள்ளுணர்வின்சேதி,

ஆன்மீகத்தின்படி தெய்வத்தின்  வாக்கு ஆகும்.

முதலில் தோன்றும் எண்ண அலைகளில்,பெறும்பாலான விஷயங்களும், சில முக்கியமான தவல்களும்,அடங்கிவிடும்.
 அதில் இறந்தகாலம் நிகழ்காலம்,எதிர்காலம் இவை அனைத்தைப்பற்றிய செய்திகளும் அடங்கும்.
மலையாளதேசத்து ப்ரஸன்னக் கலைப்படி,இறந்தகால செய்திகளை அறிவதை ஆதிப்ரஸன்னம்,அல்லது இறைவனிடம் உத்தரவு வாங்குதல் என்பர்.


மனம் சொல்லிக்கொண்டு இருக்கும் செய்தி சிறிதளவு துண்டிக்கப்பட்டுவிட்டாலும்,அதற்குப்பின் வரும் செய்திகள் எல்லாம் நமது சாதாரண எண்ண அலையில் வருவதாகிவிடும்.அதில் பெரிதாக ஏதும் அர்த்தம் இருக்காது,எதிர்கால கணிப்பும் இருக்காது..................



மனதின் ஆற்றல்........................தொடரும்




Wednesday 28 March 2012

கல்வெட்டு:11. (சிலாசாஸனம்:11)

கல்வெட்டு;-11

கேரளாவில் உருவான ப்ரஸன்னம் என்னும் கலை இன்று மிகவும் பிரபல்யமாக கேரள மக்கள் மத்தியில் உள்ளது.

ப்ரஸன்னம் என்பதினை "தேவதாசித்தி",கலை என்று தமிழிலில் கூறுவார்கள்.
சோழிகளை சுழற்றிவிட்டு அவற்றின் திசையையும் ,விழுகும் ஐதீகத்தையும் வைத்து ஒருவரது ஜாதகத்தை அழகாக கணிக்கலாம்.
பகவதியின் அருள்வாக்கு,ப்ரஸன்னம் பார்க்கும் நம்பூதிரிகளின் காதுகளுக்கு எட்டும் என ஒருசிலர் கூறுகின்றனர். ப்ரஸன்னம் காணும் நம்பூதிரிகள்,
பகவதிதேவியின் வாக்கினை அப்படியே ,தன் உள்ளத்தால் அறிந்து அதை ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதி சம்பந்தப்பட்டவர்களுக்கு தருகின்றனர்.


அந்தக் காகிததில்,
"ஆதிப்ரஸன்னம்",
"இடைப்ரஸன்னம்",
"கடைப்ரஸன்னம்",
என மூன்று பாகங்களாகப் பிரித்து ,ஜாதககாரர்களின் இறந்தகால நிகழ்வுகளையும்,
நடக்கப்போகும் ஒருசில எதிர்கால நிகழ்வுகளையும் ,அவர்கள் ஜாகத்தில் உள்ளக் குறைகளையும் அதற்கான பரிகாரத்தையும் விரிவாக எழுதித் தருகின்றனர்.


ப்ரஸன்னம் பார்ப்பதற்கு ஒருசில விதிமுறைகள் உண்டு.

1)முதலில் பகவதியின் உத்தரவைக் கேட்டப்பின்னே ஒருவருக்கு ப்ரஸன்னம் பார்க்கப்படும்.

2)நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே ப்ரஸன்னம் பார்க்கப்படும்.

3)இயற்கைநியதிக்கு புறம்பான விஷயங்களுக்கு ப்ரஸன்னம் பார்க்கப்படமாட்டாது.

4)வாழ்க்கையின் முக்கியமான பிரச்சனைகளுக்கு மட்டுமே ப்ரஸன்னம் பார்க்கவேண்டும்.அற்பமான விஷயங்களுக்கெல்லாம் ப்ரஸன்னத்தைப் பார்ப்பது தெய்வக்குற்றமாகும்.

5)தன் குறைத்தீர்க்க ப்ரஸன்னம் கேட்டு வருபவர்களிடம், ஏழை ,பணக்காரன், தெரிந்தவன், தெரியாதவன், நண்பன் ,எதிரி,தனக்கு உதவுபவன், தனக்கு உதவாதவன்,எனப் பாகுபாடுகள் பார்க்கக் கூடாது.

6)முக்கியமாக ப்ரஸன்னத்தை ஒரு வியாபாரமாகவோ,ஏமாற்றுவேலையாகவோ செய்தால் குற்றமாகும்.

7)ப்ரஸன்னக் கலையைக் கற்றவர்கள்,அந்தக்கலையை தனக்கு அதிகம் ப்ரயோகப்படுத்தக்கூடாது.

8) ப்ரஸன்னக்கலை அறிந்தவருக்கு ஆணவம்,அகந்தை,இருக்கக்கூடாது.

9)அதிகாலையில் பார்க்கப்படும் ப்ரஸன்னம் மிக சக்திவாய்ந்தது.



ப்ரஸன்னத்தில்"ஸ்தூலப்ரஸன்னம்",என்ற ஒருவகை உண்டு.

ஒருவர் வீட்டி உள்ள ,பித்ருதோஷத்தை ,மூதாதையார் சாபத்தை,இறந்துப்போன அவர்களது வம்சாவழி மூதாதையரின் ஆத்மாவின் மூலம் தீர்வுகாணலாம்.
ஸ்தூலப்ரஸன்னத்தில் இறந்தவர்களது ஆத்மா பகவதிதேவியின் மூலமாக தங்களடு,குறைகளையோ,தங்கள் வம்சத்தில் உள்ள சாபத்தையோ,எடுத்துக்கூறுவார்கள்.அதற்கான பரிகாரத்தையும் அவர்களேக் கூறிவிடுவார்கள்.
இது ஆவிகளுடன் பேசுவதுப்போன்ற விஷயம் அல்ல.அந்தக்கலை வேறு, இது வேறு,.ஆவிகளுடன் பேசுபவர்கள்,ஆத்மாக்களை வரவழைத்து அதனுடன் நேரிடையாகப் பேசுவார்கள்.
ஸ்தூலப்ரஸன்னத்தில் ஆத்மாக்காள் ,தங்கள் கருத்துக்களை பகவதிதேவியிடம் கூறுவார்கள்.அதை ஆனைபகவதி ப்ரஸன்ன வடிவில் தருவாள்.


Monday 26 March 2012

கல்வெட்டு:10. (சிலாசாஸனம்:10)

கல்வெட்டு;-10
சுமார்,20வகையான நம்பூதிரிகள் மலையாளதேசத்தில் உள்ளனர்.

1)தம்புராக்கள் அந்தஸ்தில் உயர்வான நம்பூதிரி வகை.


2)அத்யாஸ் இவர்கள் தம்புராக்களின் கிளை வகுப்பைச் சார்ந்தவர்கள், கோவில்களில் பூஜை செய்யக்கூடியவர்கள்.


3)வஷிட்டர்கள்,


4)சமயாக்கள்,


5)ஜதிமாத்ராஸ்,இவர்கள் ஆயுர்வேத வைத்தியர்கள்.
_____________________________-
எரக்காரா நம்பூதிரி,


"ஆடு",இனத்தவர்:யாகங்கள் செய்வதில் சிறந்தவர்கள்.


"எடு",இனத்தவர்:சமஸ்கிருதம் வேதம் போதிப்பவர்கள்.


"பிக்‌ஷா",இனத்தவர்:ஞானிகள்.


"சாந்தி",இனத்தவர்:கோவில் பூஜாரிகள்.


"அடுக்கால",இனத்தவர்:சமையல் செய்பர்கள்.


"அறங்கு",இனத்தவர்:(சாத்திரா):போர் வீரர்கள்;


"கிராமி நம்பூதிரிகள்',
"தாங்கல் நம்பூதிரிகள்",
"வாள் நம்பூதிரிகள்",
இவர்கள் கிராமங்களில் நிர்வாகங்கள் செய்யும் வகையறாக்கள்.


"அழவென்சேரி நம்பூதிரிகள்",:இவர்கள் நம்பூதிரிகளிலேயே உயர்ந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள்.


"துல்லு பிராமணர்கள்",;வெளியிடங்களில் இருந்து கேரளாவிற்கு குடிப்புகுந்த பிராமணர்கள் இப்படி அழைக்கப்படுவார்கள்.
வடக்கு கேரளாவில் இருந்து 17ம் நூற்றாண்டில் குடியேறியவர்கள்.


"அம்கிராசம் கோத்ரம்",
"பாரத்வாஜம் கோத்ரம்",
"கவுசிகம் கோத்ரம்",
"விஷ்வாமித்ரம் கோத்ரம்",
"பாரகவம் கோத்ரம்",
"அத்ரீ கோத்ரம்",
இவையாவும் நம்பூதிரிகளின் கோத்ரங்களாக கேரளாவில் விளங்குகின்றன.



Wednesday 21 March 2012

கல்வெட்டு:9. (சிலாசாஸனம்:9)

கல்வெட்டு;-9
சோட்டாணிக்கரை பகவதிஅம்மன் ஆலயத்தின் வடிவமைப்புக்கள்.


1)சோட்டாணிக்கரை ஆலயத்திற்கு 4வாசல்கள் உள்ளன.


2)மேலக்காவு,கீழக்காவு என இரு முக்கியமான அம்பாள் சந்நிதானங்கள் அங்கு உள்ளன.
மேலக்காவில் பகவதிதேவியும்,
கீழக்காவில் பத்ரகாளியும் அருள்பாலிக்கின்றனர்.


3)மேலக்காவு பகவதிக்கோவிலில் மேற்குநோக்கி கொடிமரம் உள்ளது.பகவதியும் மேற்குதிசை நோக்கி காட்சித்தருகிறார்.அதன் உள்ளேயே,"சாஸ்தா"வின் சந்நிதானம், உள்ளது.


4)மேலக்காவு கோவிலின் வலப்பிரகாரத்தில்,தலவிருக்க்ஷம் உள்ளது.
இக்கோவிலின் தலவிருக்‌ஷம் "பவளமல்லி",.


5)மேலக்காவு பகவதிகோவிலின் பின்புறம்,"சிவன் சந்நிதானம் உள்ளது.
கிழக்கு திசையில் .வடகிழக்குமூலையில் "நாகராஜர்",சந்நிதானம் உள்ளது.


மேலக்காவில் பகவதி அம்மனை தரிசனம் செய்ததும்,
நாம் செல்லவேண்டிய இடம்,கீழக்காவு பத்ரகாளிக்கோவில்.


6)கீழக்காவு பத்ரகாளி கோவில்,மேலக்காவு கோவிலில் இருந்து பல படிக்கட்டுக்களை கடந்து செல்லும்வன்னம் அமைந்துள்ளது.


7)அந்தப்படிக்கட்டுக்களை கடக்கும் வழியில் ,வலப்புறம் "ஐயப்பன் சந்நிதானம்",,உள்ளது.
ஐயப்பன் சன்னிதானத்திற்குமுன்
"வெடிவழிபாடு",செய்யும் இடம் உள்ளது.


8)அந்தப்படிகட்டுக்கள் முடியும் இடத்தில்,கோவிலின் குளம் அங்கு உள்ளது.
அந்தக்குளத்தைச் சுற்றி வலப்புறமாக வலம் வந்தால் அங்கு "சங்குசக்ர",வடிவில் நாராயண தத்துவம் உள்ளது.


9)அதைக்கடந்ததும்,கீழக்காவு பத்ரகாளிக்கோவில் சன்னிதானம் வருகிறது.
கீழக்காவில் உள்ள பத்ரகாளி அக்காள் என்றும்,
மேலக்காவில் உள்ள பகவதியம்மன் அவளின் தங்கை என்றும் ஐதீகம் உள்ளது.


10)இந்தக் கீழக்காவு கோவிலில்தான்,
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,தீயசக்திகளினால் ஆட்க்கொள்ளப்பட்டவர்களும்,அனைவரும் பரிகாரத்திற்கும்,தங்களைப்பிடித்த தீயசக்திகள் விலக பூஜைகள் செய்யவும் வருகின்றனர்.
இந்தக் கீழக்காவு சன்னிதானத்தில்தான் குருதிபூஜை இரவு 8.30மணிக்குமேல் நடைப்பெறும்.

கல்வெட்டு:8. (சிலாசாஸானம்:8)

கல்வெட்டு;-8


சோட்டாணிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தின் தினசரி பூஜைகளும் ,பூஜைக்கான காலங்களும்.

அதிகாலை கோவில் நடைதிறப்பு:-காலை4மணி.


விஷேச காலங்கள் மற்றும்
வெள்ளிக்கிழமைகளில்:-காலை3.30மணி.


சிவ தரிசனம்:-
காலை 5.00மணி முதல் மதியம் 11.00மணி வரை.


சரஸ்வதி தரிசனம்:-காலை 5.30மணி.


காலை ஷீவேலி:-காலை 6.00மணிக்கு.


கீழக்காவுகுருதி நெய்வேத்தியம்:-காலை 7.30மணி.


பார்வதி(பந்தீரடி)தரிசனம்:-காலை 7.45மணிக்கு மேல்.


உச்சிகால பூஜை:-மதியம் 12.00மணி.


உச்ச ஷீவேலி:-மதியம் 12.10மணி.


சாயங்கால நடைதிறப்பு:-மாலை 4மணி.


தீப ஆரதனை:-மாலை 6.30மணி.


இரவு பூஜை;-மாலை7.30 மணிக்குமேல்.


இரவு ஷீவேலி:-மாலை8.00மணி.


கீழக்காவில் பெரிய குருதி:-இரவு8.00மணிக்கு மேல்.  


இத்திருத்தலத்தில் குருதிபூஜை மிகமுக்கியமான பூஜை ஆகும்.அதைக் கண்டு தரிசித்தாலே .,தீவினைகள் தோஷங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

கல்வெட்டு:7. (சிலாசாஸனம்:7)






சோட்டாணிக்கரை ப்ரஸன்ன மண்டபம்...
பிப்ரவரி மாதம் 6ம்தேதி,2011ம் ஆண்டு நடந்த ஓர் உண்மை சம்பவம்....




அன்னைபகவதி வாழும் மனிதர்களை மட்டும் இன்றி,
இறந்துப்போன மனிதர்களின் குறைகளைக்கூடப் போக்ககூடிய தெய்வம்.
அதனால்தான் அங்கு இறந்தவர்களின் ஆவிகளை சாந்தப்படுத்த "குருதிபூஜை",செய்யப்படுகிறது.
இறந்தவர்களின் கோபம்,குறைகள்,தவறான எண்ணங்கள்,ஆகியவை குருதிபூஜையில் சுத்தப்படுத்தப்பட்டு,தூய்மை ஆகிறது.
அவைகளால் ஆட்க்கொள்ளப்பட்ட மனிதர்களும்,அவற்றின் பிடியில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு வருகின்றனர்,.இவையாவும் என் அன்னை பகவதிக்கு மட்டுமே உள்ள தனித்துவம்.


அன்றையதினம்,ப்ரஸன்ன மண்டபத்தில்,
திரு,நமோநாராயணதம்புரான்,
திரு,அச்சப்பா,.,
திரு.குட்டப்பநாயர்..,
திரு.ஷீனிவசு தம்புரான்,..ஆகியோர் கூடியிருந்தனர்.
தமிழகத்தைச் சார்ந்த ,பாலமுரளிதியாகராஜன் என்பவரது,காலமான தாயார்,
"தெய்வத்திரு காமாட்சி அம்மாள்", அவர்களை ஸ்தூலப்பிரஸன்னத்தில் அழைத்துப்பேச பூஜைகள் செய்யப்பட்டன.


மண்டபக் கதவுகள் மூடப்பட்டு இருந்தன.
பகவதிஅம்மனிடம் முதலில் உத்தரவு கேட்கப்பட்டது.அவளது உத்தரவுக்குப் பின் மிகச்சிறியளவில் ஆன,
12 தாமிரப்பாத்திரங்களை கவிழ்த்துவைத்து அவற்றிற்கு தீபஆரதனை செய்தனர்.பூக்கள் போட்டு மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்தனர்.
(12பாத்திரங்கள்தான் ஆலயத்தின் குருதிபூஜையிலும் பிரதனமாக வைக்கப்படும்)
12ஆழ்வார்களின் வடிவமாக 12பாத்திரங்கள் வைக்கபடுவது ஐதீகம்.


பின் தர்ப்பைப்புல்களினால் ஒவ்வொருப் பாத்திரத்தையும் இணைத்தனர்..
(தர்ப்பைக்கு,குறிப்பிட்ட ஓர் ஆத்மாவின் ஷக்தியினை ஈர்க்கும்  தன்மை உண்டு என்பது அவர்களது ஐதீகம்)
12பாத்திரங்களுக்கும்,12எழுமிச்சம் பழங்களை வெட்டி மந்திரங்களைக் கூறிக் காவுக் கொடுத்தனர்.
(வருகின்ற ஆத்மாவிற்கு,பூலோகத்தில் உள்ள துஷ்டமந்திரவாதிகளினால் தொல்லை ஏற்படாமல் இருக்க,பூதகணங்களினால் தொல்லை ஏற்படாமல் இருக்க பழத்தை காவு கொடுப்பது ஐதீகம்).
பிறகு சிறிது பச்சரிசி வெல்லம் இவற்றை பகவதிஅம்மனுக்கு வைத்துப் படைத்தனர்.
(வருகின்ற ஆத்மாவிற்கு வழித்துணையாய் பகவதியை இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்தப்படையல்)


அமைதியான அந்த மண்டபத்தில்,மெல்ல பச்சைக்கற்பூரத்தின் வாசனையும்,துளசியின் வாசனையும் வீசத்தொடங்கியது.
12பாத்திரங்களையும் இணைத்துக் கொண்டிருந்த தர்ப்பைப்புல்களும் தானாகவே ஒவ்வொன்றாய் விலகத்தொடங்கின.


பின்,"ஸ்தூலப்பிரஸனத்தை",
மலையாளதேசத்து மக்களுக்கு வகுத்துதந்த,
காலமான தெய்வத்திரு :"கதிர்கடவு காசிநாதர்தம்புரானுக்கு ",
அப்போது தீப ஆராதனை எடுப்பார்களாம்.
(காசிநாதர்தம்புரானின் ஆத்மா மறுஜென்மம் எடுத்திருப்பதாகாவும்,மறுஜென்மம் எடுத்துள்ள அவரது வாழ்க்கை மீண்டும் ஷக்திபெற வேண்டும் என்பதற்காக,
ஒவ்வொரு பிரஸன்னத்தின் போதும் மரியாதை நிமித்தமாக,தீபஆராதனை  எடுக்கப்படுவது வழக்கம்).
தம்புரான்களின் அழைப்பை ஏற்று அங்கு வந்திருந்த,
பாலமுரளிதியாகராஜன் அவர்களின்  ,தாயார்"காமட்சிஅம்மாளின்",ஆத்மாவின் அறிவுரையால்,அன்றையதினம்,காசிநாதர்தம்புரானுக்கு படையலோ தீபஆரதனையோ செய்யப்படவில்லை.
அதற்கான விளக்கத்தை கூடியிருந்த தம்புரான்கள் அறிந்து செயல்பட்டனர்.


சிறிது நேரத்தில்,"ஸ்தூலப்ரஸன்ன சோத்யம் உத்தரம்"(கேள்வி பதில்கள்),
ஒரு வெள்ளைக்காகிதத்தில் எழுதப்பட்டது.
தம்புரானின் கேள்விகளுக்கு,ஆத்மாவின் பதில்கள் 12பாத்திரங்களின் மூலமாக தானாகவே நகர்ந்து அக்‌ஷரங்களை நோக்கி சென்றன.
அன்றைய தினம் வந்த காமாட்சிஅம்மையார்,தெய்வஅனுகூலம் அதிகம் உள்ளவர் என்றும்,மனதைரியமும்,உள்ளவர் எனவும் தம்புரான்கள் கூறினர்.
காமட்சிஅம்மாள் தனது மகனுக்காகவும் மருமகளுக்காகவும் பேரன்களுக்காகவும் சந்தோஷமாக வந்து வாக்குச்சொல்லினார்.இன்னும் சொல்லப்போனால் அந்த அன்னை வந்தப்பின் அவரது மகனது வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பூத்துக்குலுங்கியது.
"நான் என் சந்ததியை மட்டும் அல்ல..,அனைத்துக் குழந்தைகளையும் என் பிள்ளையாகக் காப்பேன்.என் மகனது வழியில் வந்த எனது இளையப்பேரன் வடிவில் இனி என் எண்ணங்களை வெளிப்படுத்துவேன்..",
என்றும்,தனக்குப் பிடித்த விஷயங்களையும் கூறினார்.


"எங்கள் அனைவருக்கும் நீங்கள் கூற எண்ணும் அறிவுரை என்ன...?",
என ஓர் தம்புரான் கேட்டதற்கு,
"10யானைகள் மார்பின் மேல் ஏறி நின்றால்கூட,மனதைரியத்துடன் போராடவேண்டும்...மனதில்பட்டதை மறைக்காமல் கூறவேண்டும்..,இயன்றவரை இல்லாதவர்கு அன்னம் இடவேண்டும்...
சுயநலமற்ற வாழ்வே சொர்க்கத்திற்கு வழிகாட்டி...", எனக் கூறினார்.


காமாட்சிஅம்மாளின் குடும்பத்தினருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடக்கத்தில் சற்றே அதை அவர்கள் ஏற்க யோசித்தனர்.பின் அந்த அம்மையார் சொல்லியவை மெல்ல மெல்ல அவர்கள் இல்லத்தில் நடக்கத்தொடங்கின.அதன்பின்னரே
"தன் அன்னை காமாட்சி இன்றும்  தனது இல்லத்தில் தன்னுடனும் தன் பிள்ளைகளுடனும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள்..",என ,அவரது மகன்,பாலமுரளிதியாகராஜன் முழுமையாக ஏற்றுக்கொண்டார்....


ஸ்தூலப்பிரஸனம் பார்ப்பது தவறு.
இறந்தவர்களை அழைப்பது ,இந்துசாஸ்திரப்படி ஏற்கப்படாத ஒன்று.
இப்படி ஒருசிலர் கூறுகின்றனர்.


அவர்களுக்கு நான் கேட்கும் கேள்வி..,
இறந்தவர்களை அழைப்பது தவறு என்றால்..
""இறந்தவர்களுக்கு தர்ப்பணத்தின் போதும் திதிக்கொடுக்கும்போதும் ,அவர்களை அழைத்து பிண்டம் வைப்பது தவறு இல்லையா?
அமாவாசை அன்று இறந்தவர்களை 'கா கா ", எனக் கூவி அழைத்து பிண்டம் வைப்பது தவறுஇல்லையா?.
அப்போதும் மட்டும் இறந்தவர்களை அழைக்கலாமா? அது தவறு இல்லையா?"""....









Monday 19 March 2012

கல்வெட்டு:6.(சிலாசாஸனம்:6)


20ம் நூற்றாண்டில் ஓர் சரித்திரம்.....


திருச்சூர் மாவட்டம்,தலப்பிள்ளே தாலுக்காவில்,வாழுந்துக் கொண்டிருக்கும்,
"கடவல்லூர் ஹரிகிருஷ்ணம்மே தம்புராட்டி"அவர்களின் சரித்திரம்...


திருச்சூர் மாவட்டம் தளப்பில்லே தாலுக்காவில்  கடவல்லூரில், ராமகிருட்டிணபணிக்கருக்கும் பிரபாவதிக்கும் ஒரே ஒரே மகளாய் பிறந்தவர் ஹரிகிருஷ்ணம்மா.
கிருஷ்ணம்மாவின் பெற்றோர்,அவரை நன்குப் படிக்கவைக்க எண்ணி அவரை அருகில் உள்ள பாடசாலைக்கு படிக்க அனுப்பினர்.
ஒருசமயம்,கிருஷ்ணம்மாளைக் காண அவளது பள்ளிக்கு,அவளது தந்தை ராமகிருட்டணபணிக்கர்  சென்றார்.
"கிருஷ்ணம்மாள் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்றும் அவள் நிறைய பொய் பேசுகிறாள் ",என்றும் ஆசிரியர்கள் புகார் கூறினார்கள்.
அதைக் கேட்ட பணிக்கர் மனவேதனை அடைந்தார்.
அன்றிரவு,
"இன்னைக்கு பள்ளிக்குப் படிக்கப் சென்றாயா?என்னப்பாடம் படித்தாய்?".
என்று பணிக்கர் கேட்டதும்,
"பள்ளிக்குப் போனேன் அப்பா.அங்கு இன்னைக்கு இலக்கியப் பாடம் படித்தேன் ",
என கிருஷ்ணம்மாள் சிறிதும் யோசிக்காமல் பொய்கூறினாள்.
10வயது உடைய தன் மகள் கூச்சப்படாமல் பொய் பேசுவதை எண்ணி பணிக்கர் வேதனை அடைந்தார்.அவர்,அவளிடம் தான் பள்ளிக்கு வந்ததைக் கூறவில்லை.


மறுநாள் ,கிருஷ்ணம்மாள் பள்ளிக்கு கிளம்பியதும் அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின் தொடர்ந்தார் பணிக்கர்.
பள்ளிக்கு செல்லும் பாதையை விட்டு காட்டுப்பாதைப் பக்கமாக அவலது கால்கள் விறுவிறுவென சென்றன.
பெரியவர்களே செல்ல அச்சப்படும் காட்டுப்பாதைக்குள் அவள் போவதைக் கண்ட பணிக்கருக்கு சற்றே அச்சம் ஏற்பட்டது.
ஒருப் பெரிய பாம்புப்புற்றின் அருகே சென்ற கிருஷ்ணம்மாள்,
"ஏய் பகவதி வெளியே வாடி....உனக்காக இன்னைக்கு தேங்கப்புட்டும் பாலும் கொண்டாந்திருக்கேன்..",
என்று கூறி,தான் பள்ளிக்கு சாப்பிடக் கொண்டுவந்த பலகாரத்தை புற்றின் கீழே வைத்தாள்.
புற்றில் இருந்து 6அடி நீளம் கொண்ட நல்லப்பாம்பு ஒன்று சரசரவென வெளியே வந்தது.
அவள் வைத்த தேங்காப்பால் புட்டினை நாவினால் நக்கி உண்டுவிட்டு,...அவளது உடலின் மேலே ஏறி விளையாடத்தொடங்கியது.
கிருஷ்னம்மாளோ..பாம்பினை முத்தம் கொடுத்து கொஞ்சியவளாய் கலகலவென சிரித்து விளையாடினாள்.


மறுநாள்,
"உன் பொண்ணுக்கு ஏதோப் பேய் புடிச்சிருக்கு",என பணிக்கரின் நண்பர்கள்.,
"வாயைத்திறந்தாலே பொய் சொல்ற உங்கப்பொண்ணுக்கு பகவதி எப்படிங்க வசப்படுவாள்?அவள் எதோ மாயவித்தைக்காட்டி உங்களை ஏமாத்துறாள்",என ஆசிரியர்கள்,
"அவளுக்கு மனநிலை சரியில்லை போலிருக்கு",என உறவினர்கள்,
இப்படி அனைவரும் வாய்க்க்ய் வந்தப்படி கூறினர்.
கிருஷ்னம்மாளின் கல்வி அரைகுறையாகவே போனது.நாளடைவில்,எதிர்காலத்தில் நடக்கப்போவதையெல்லாம் அவள் கூறத் தொடங்கினாள்.


"1947இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும்", என அன்றைய மக்களுக்கு கிருஷ்ணம்மாள் வாக்குகூறினாராம்.அது நடந்தது.
"2011ல் இயற்கையினால் அழிவுகள் ஆங்காங்கே ஏற்படும்,என்றும் குடிக்கும் தண்ணீருக்காக கேரளமாநிலத்திற்கும்,அதன் அண்டைமாநிலத்திற்கும் பகை உச்சமாகும்", என.,1952ல் கூறியுள்ளார்.
(அதுவே,2011ல் முல்லைப்பெரியாறு பிரச்சனை,என கிருஷ்னம்மாளின் நலன்விரும்பிகள்,இன்றுக் கூறுகின்றனர்)
"2016ல் தமிழக கேரள மாநிலத்துக்கிடையே,
அன்பு அதிகமாகும்.இரு மாநிலத்திற்கும் ஓர் உறவுப் பாலமாய்.,சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஆன்மீக வழிக்காட்டுவான்..அவன் இரு மாநில மொழிகளும் அறிவான் அவன் இரு மாநிலத்திற்கும் உறவுக்காரன் ஆவான்.அவன் சிறிதுகாலமே உலகவாழ்வை வாழ்வான்",
என இன்று கூறியுள்ளார்.


"அனைத்தையும் கூறும் நீங்கள்,சுனாமி வரப்போவதை ஏன் கூறவில்லை?",
என ஒருப் பத்திரிக்கை நிருபர் கேட்டதிற்கு,
"உன் பேர் என்ன?",
என கிருஷ்ணம்மா கேட்டாராம்.
"என் பெயர் ராமானுஜம்",
என நிருபர் கூறியுள்ளார்.
"உன் தந்தைப் பெயர் என்ன?",
என அவர் கேட்க,
"என் அப்பா பேரு கிருஷ்ணநாயர்",
என நிருபர் கூறினாராம்.
"உன் தாத்தா பேரு",
என கிருஷ்ணம்மாள் மறு கேள்வி கேட்க,
"பத்ரிநாயர்...",
என தன் தாத்தாவின் பேரை நிருபர் கூற,
"உன் தாத்தாவின்னுடைய தாத்தாப் பேரு என்ன?",
என கிருஷ்ணம்மாள் கேட்டதும்,
"அவர்களைப் பற்றி என் தந்தையோ தாத்தாவோ என்னிடம் கூறவில்லை.எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்...",
என நிருபர் கூற,
"அதேப்போல் தான் ,சுனாமி வரப்போவதை என் பகவதிக் கூறவில்லை.எனக்குத் தெரிந்தவரை தான் என்னால் கூறமுடியும்.உனக்கு கொல்லு தாத்தா பேரு தெரியவில்லை என்பதால்,உன் அப்பாவை நீ தப்புசொல்ல முடியாது.அதேப்போல், ஒருசில விஷயங்கள்
விதிப்படி நடந்தே ஆகவேண்டும்,அதை யாராலும் தடுக்க இயலாது...அதற்காக என் பகவதியையும் குறைகூற இயலாது",
எனக்கூறி சிரித்தாராம்.




தற்போது,கிருஷ்ணம்மாளுக்கு 81 வயது இருக்கும்.
இன்றும் அவர்  அனைவருக்கும் நல்வழிக்காட்டியாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.
யாருக்கும்,அருள்வாக்கு என்றோ,ஜோதிடம் என்றோ யாருக்கும் ஆரூடம் கூறுவதில்லை.
யாருக்கேனும்,ஏதாவது சொல்ல எண்ணினால் மட்டுமே கூறுகிறார்.
மக்கள் கூட்டமாக சந்திப்பதைகூட அவர் விரும்புவதில்லை.
அவர் இன்னும் நீண்ட ஆயுள் பெற,என்ட பகவதி அன்னையை வேண்டிக்கொள்கிறேன்.....









Friday 16 March 2012

கல்வெட்டு;-5 (சிலாசாஸனம்;-5)


19ம் நூற்றாண்டு சரித்திரத்தில் நடந்த ஒரு முக்கியப்பகுதி;


எர்ணாக்குளம்,தெய்வத்திரு கதிர்கடவு மேல்சாந்தி காசிநாதர் நம்பூதிரியின் வாழ்க்கை சிரித்திரம்:


எர்ணாக்குள,ம்,
ஜூன்5,1909ஆண்டு,
கூச்சாமணிஅம்மவுக்கும்,ஆழப்புழா விஸ்வநாதஅச்சப்பாவிற்கும்,மகனாய் பிறந்தவர் காசிநாதர்.
அவரது தந்தை ஆழப்புழா கோவில் குருக்கள்.
காசிநாதர் இளம் வயதிலேயே தன் தந்தையோடு பகவதி அம்மன் கோவிலுக்கு செல்வதுண்டு.
தன் தந்தை கோவிலில் பூஜைகள் செய்துக் கொண்டிருகும்போது ,
கோவிலின் பிராகாரங்களில் தன் கண்ணில்பட்ட இடங்களில் எல்லாம் ,
சிறுசிறு கற்களை ஸ்வாமிசிலைகள் போல் அடுக்கி வைத்து கோவில்போல் மணலில் செய்து அதற்கு பூ போட்டு குழந்தைத்தனமாக பூஜைகள் செய்து வணங்குவார் காசிநாதர்.
"கண்டகண்ட இடங்களில் எல்லாம் இப்படி ஸ்வாமியை பிரதஷ்டை செய்வது,கோவில்போல வணங்கக்கூடாதுடா...",
என அனைவரும் காசிநாதரிடம் கூறுவார்கள்.
அதற்கு 7வயது சிறுவனான காசிநாதர்,
"என் பகவதி வந்து தப்புன்னு சொன்னால்தான் நீங்க சொல்வதை ஒப்புக்கொள்வேன்.எனக்கும் பகவதிக்கும் ஆயிரம் இருக்கும் இடையில நீங்க யாரு குறைகூறுவதற்கு?",
என கேட்பான்.


காலங்கள் கடந்தது.
18வயதில்,காசிநாதர் தன் தந்தையைவிட பலமடங்கு மந்திரக்கலைகளை கற்று பிரபலமாக விளங்கினான்.
ப்ரஸன்னம் என்னும் தேவதாசித்திக்கலையில் காசிநாதர் சிறந்து விளங்கினார்.
ஒருவரது ஜாதகத்தைப் பார்த்துமே அவரது இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம் இவற்றை வியக்கும்வன்னம் கூறிவிடுவார்.அதற்கு யாரிடமும் பணவசூல் செய்வதும் கிடையாது.எனவே மக்கள் அனைவரும் அவரிடம் தங்கள் குறைகளுக்கு பரிகாரம் கேட்டு வரத்தொடங்கினர்.


இறந்துப்போனவர்கள்கூட ,ஆத்மாவாக வந்து காசிநாதரிடம் தன் குறையையோ.,அல்லது தன் வம்சத்தினர் முன்னேற்றதிற்கோ,அவரிடம் ப்ரஸனத்தில் கோரிக்கைகள் வைப்பார்களாம்.
காசிநாதரோ,இறந்துப்போன மூதாதையர்களின் குறைத்தீர்க்கும் அச்சம்பிரதாயத்தை,"ஸ்தூலப்ரஸன்னம்", என , பெயரிட்டு,அதை சாஸ்திரமுறைப்படி தன் சிஷ்யர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.
உயிருடன் வாழும் ஒருவரைப் பார்த்ததும் அவர் மனம் அறிந்து மனதுக்குள் உள்ள அனைத்தையும்,கணித்துக் கூறுவதைப்போல்,
இறந்துப்போன ஒருவரது புகைப்படத்தைப் பார்த்ததுமே,அவருடைய தேவையென்ன?
அவரது தற்போதைய நிலையென்ன?
அவர் தன் குடும்பத்துக்கு கூற நினைப்பது என்ன?
என அனைத்தையும் அறிந்துவிடுவார்.
ஆத்மாக்களுக்கும்,காசிநாதர்க்கும் மனதுக்குள் உரையாடலே நடக்கும் என அவரது சிஷ்யர்கள் இன்றும் கூறுகின்றனர்.


ஆத்மாக்களின் குறைகள் மட்டும்மின்றி,
மனிதர்களின் குறைகள் மட்டும்மின்றி,
கோவில்களில் உள்ள தோஷங்கள்,கோவில் சுபகாரியங்களுக்கு நாள் குறிப்பது,
தாணியங்கள் செழிக்க பரிகாரங்கள்,
பேரழிவை உருவாக்க இருக்கும் இயற்கையை கட்டுப்படுத்தி அமைதி ஆக்குவது,
கிரஹனங்களின் உக்கிரங்களை ஆசுவாசப்படுத்துவது,
போன்று பலவிதக் கலைகளிலும் சிறந்து விளங்கினார்.


ஒருசமயம் தனது மந்திரசக்தியால்,பகவதி அம்மனையே கட்டிப்போட்டு,தேவதைகளுக்கு வேடிக்கைக் காட்டினார்.


பகவதியோ சிரித்துக்கொண்டே,
"இன்று என்னை கட்டிப்போட்டு நீ ரசித்தாய்.
என்னில் எளிய தேவதைகளுக்கு என்னை காட்சிப்பொருளாய் வைத்தாய்.
நான் உனக்காக என் வேதனையை பொருத்துக்கொண்டேன்,.
உன் மறுஜென்மத்தில் உன்னை நான் ,சிலகாலம் கட்டிப்போட்டு,
உன்னில் எளியவர்க்கு உன்னை காட்சிப்பொருளாய் வைப்பேன்,
அப்பொழுது எனக்காக நீ உன் வேதனயைப் பொறுத்துக்கொள்ளவேண்டும்..",
என்றாளாம்.
முக்காலமும் அறிந்தமகானாய் திகழ்ந்த காசிநாதர்,முற்பிறவியில் மலையாலதேசத்தில்
சித்தராக வாழ்ந்தவர் என அவரது சிஷ்யர்களில் ஒருசிலர் இன்றும் கூறுகின்றனர்.


"என் மரணம் நெறுங்கிவிட்டது....
1969ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி நான் இருதயநோயினால் இம்மண்ணைவிட்டு
செல்வேன்...எனது ஜெனனம் தொடரும்.
என் மறுஜென்மம்,கண்டிப்பாக கேரளதேசத்தில் இருக்காது.
என் மக்கள் ,என் சிஷ்யர்களை ,என் தேசத்தைக் காண ஒருசராசரி மனிதனாய்,
பலதுயரங்களில்,பாவங்கள் செய்தவனாய்,என் பகவதியைத் தேடி நான் வருவேன்.
சராசரி மனிதனாய் வரும் என்னை மீண்டும் கலைகள் கற்ற காசிநாதனய் உள்ளத்தால்
உருவெடுக்க வைத்து ரசிப்பாள் என் பகவதி.
என் கலைகளை ,என் சிஷ்யன் ஷீனிவாசுதம்புரானுக்கு,அருளி உள்ளேன்.
அதை மீண்டும் நானே அவன் மூலம் பெறுவேன்...",
என புத்தகத்தில் எழுதிவைத்துள்ளார்.


அவர்கூறியபடியே...அவரது மரணம் அமைந்தது.
ஆனால் மறுஜென்மம் எடுத்தாரா?
கேரளாவிற்கு வந்தாரா?
அவையெல்லாம் நடந்ததா?இல்லையா?
என்ற கேள்விக்கு,
இன்று ஒருசிலர் ஆம் என்கின்றனர்.ஒருசிலர் இல்லை என்கின்றனர்.
இந்தக்கேள்விகளுக்கு விடை அன்னை சோட்டாணிக்கரை பகவதிக்கு மட்டுமே
தெரியும்......................